சூரா 108 ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)

  1. إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ

    (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.

    108:1
  2. فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

    எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.

    108:2
  3. إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ

    நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.

    108:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்