சூரா 24 ஸூரத்துந் நூர் (பேரொளி), அயாஹ் 43
-
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُزْجِي سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهُ ثُمَّ يَجْعَلُهُ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مِنْ جِبَالٍ فِيهَا مِنْ بَرَدٍ فَيُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ وَيَصْرِفُهُ عَنْ مَنْ يَشَاءُ ۖ يَكَادُ سَنَا بَرْقِهِ يَذْهَبُ بِالْأَبْصَارِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَلَمْ تَرَ
- நீர் பார்க்கவில்லையா?
- أَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- يُزْجِى
- ஓட்டிவருகிறான்
- سَحَابًا
- மேகங்களை
- ثُمَّ
- பிறகு
- يُؤَلِّفُ
- இணைக்கிறான்
- بَيْنَهُۥ
- அவற்றுக்கு இடையில்
- ثُمَّ
- பிறகு
- يَجْعَلُهُۥ
- அவற்றை ஆக்குகிறான்
- رُكَامًا
- ஒன்றிணைக்கப்பட்டதாக
- فَتَرَى
- ஆகவே பார்க்கிறீர்
- ٱلْوَدْقَ
- மழை
- يَخْرُجُ
- வெளிவருவதை
- مِنْ خِلَٰلِهِۦ
- அவற்றுக்கு இடையிலிருந்து
- وَيُنَزِّلُ
- அவன் இறக்குகிறான்
- مِنَ ٱلسَّمَآءِ
- வானத்திலிருந்து
- مِن جِبَالٍ
- மலைகளில்
- فِيهَا
- அதில் உள்ள
- مِنۢ بَرَدٍ
- பனியிலிருந்து
- فَيُصِيبُ
- அவன் தண்டிக்கிறான்
- بِهِۦ
- அதன் மூலம்
- مَن يَشَآءُ
- தான் நாடியவரை
- وَيَصْرِفُهُۥ
- இன்னும் அதை திருப்பிவிடுகிறான்
- عَن
- விட்டும்
- مَّن يَشَآءُ
- தான் நாடியவரை
- يَكَادُ سَنَا
- கடுமையான வெளிச்சம் ஆரம்பித்து விடுகிறது
- بَرْقِهِۦ
- அதன் மின்னலின்
- يَذْهَبُ
- பறித்துவிடும்
- بِٱلْأَبْصَٰرِ
- பார்வைகளை
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.
24:43
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்