சூரா 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்), அயாஹ் 11 – 14
-
بَلْ كَذَّبُوا بِالسَّاعَةِ ۖ وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا
எனினும் அவர்கள் (இறுதி விசாரணக்) காலத்தையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; ஆனால் நாம் அந்தக்காலத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
25:11 -
إِذَا رَأَتْهُمْ مِنْ مَكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا
(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.
25:12 -
وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا
மேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையை தாங்கமாட்டாமல், அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்.
25:13 -
لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا
“இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவை அழைக்காதீர்கள்; இன்னும் பல அழிவுகளை வேண்டியழையுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்).
25:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்