சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 103 – 105
-
فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
37:103 -
وَنَادَيْنَاهُ أَنْ يَا إِبْرَاهِيمُ
நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
37:104 -
قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
37:105
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்