சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 31
-
وَمَا جَعَلْنَا أَصْحَابَ النَّارِ إِلَّا مَلَائِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا لِيَسْتَيْقِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا ۙ وَلَا يَرْتَابَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ وَالْكَافِرُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِيَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَا جَعَلْنَآ
- நாம் ஆக்கவில்லை
- أَصْحَٰبَ ٱلنَّارِ
- நரகத்தின் காவலாளிகளை
- إِلَّا مَلَٰٓئِكَةً
- தவிர/வானவர்களாக
- وَمَا جَعَلْنَا
- இன்னும் நாம் ஆக்கவில்லை
- عِدَّتَهُمْ
- அவர்களின் எண்ணிக்கையை
- إِلَّا
- தவிர
- فِتْنَةً
- ஒரு குழப்பமாகவே
- لِّلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரித்தவர்களுக்கு
- لِيَسْتَيْقِنَ
- உறுதி கொள்ளவேண்டும் என்பதற்காக(வும்)
- ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ
- வேதம் கொடுக்கப்பட்டவர்கள்
- وَيَزْدَادَ
- அதிகரிப்பதற்காகவும்
- ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கை கொண்டவர்கள்
- إِيمَٰنًا
- நம்பிக்கையால்
- وَلَا يَرْتَابَ
- சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும்
- ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ
- வேதம் கொடுக்கப்பட்டவர்களும்
- وَٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்களும்
- وَلِيَقُولَ
- கூறுவதற்காகவும்
- ٱلَّذِينَ
- எவர்கள்
- فِى قُلُوبِهِم
- தங்கள் உள்ளங்களில்
- مَّرَضٌ
- நோய்
- وَٱلْكَٰفِرُونَ
- நிராகரிப்பாளர்களும்
- مَاذَآ
- என்ன
- أَرَادَ
- நாடுகின்றான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- بِهَٰذَا
- இதன் மூலம்
- مَثَلًا
- உதாரணத்தை
- كَذَٰلِكَ
- இவ்வாறுதான்
- يُضِلُّ
- வழிகெடுக்கின்றான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- مَن يَشَآءُ
- தான் நாடுகின்றவர்களை
- وَيَهْدِى
- நேர்வழி செலுத்துகின்றான்
- مَن يَشَآءُ
- தான் நாடுகின்றவர்களை
- وَمَا يَعْلَمُ
- அறிய மாட்டார்(கள்)
- جُنُودَ
- இராணுவங்களை
- رَبِّكَ
- உமது இறைவனின்
- إِلَّا
- தவிர
- هُوَ
- அவனை
- وَمَا هِىَ
- இல்லை/இது
- إِلَّا
- தவிர
- ذِكْرَىٰ
- ஒரு நினைவூட்டலே
- لِلْبَشَرِ
- மனிதர்களுக்கு
அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்| “அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?” என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்; அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.
74:31
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்