சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி), அயாஹ் 28
-
وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا مَكَانَكُمْ أَنْتُمْ وَشُرَكَاؤُكُمْ ۚ فَزَيَّلْنَا بَيْنَهُمْ ۖ وَقَالَ شُرَكَاؤُهُمْ مَا كُنْتُمْ إِيَّانَا تَعْبُدُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَيَوْمَ
- நாளில்
- نَحْشُرُهُمْ
- ஒன்று சேர்ப்போம் அவர்கள்
- جَمِيعًا
- அனைவரையும்
- ثُمَّ
- பிறகு
- نَقُولُ
- கூறுவோம்
- لِلَّذِينَ
- எவர்களுக்கு
- أَشْرَكُوا۟
- இணைவைத்தனர்
- مَكَانَكُمْ
- உங்கள் இடத்தில்
- أَنتُمْ
- நீங்களும்
- وَشُرَكَآؤُكُمْ
- இன்னும் இணைகள் உங்கள்
- فَزَيَّلْنَا
- நீக்கி விடுவோம்
- بَيْنَهُمْ
- அவர்களுக்கிடையில்
- وَقَالَ
- இன்னும் கூறுவார்
- شُرَكَآؤُهُم
- இணை(தெய்வங்)கள் அவர்களுடைய
- مَّا كُنتُمْ
- நீங்கள் இருக்கவில்லை
- إِيَّانَا
- எங்களை
- تَعْبُدُونَ
- வணங்குகிறீர்கள்
(இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி| “நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்” என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள்” நீங்கள் எங்களை வணங்கவேயில்லை” என்று கூறிவிடும்.
10:28
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்