சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி), அயாஹ் 90
-
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا ۖ حَتَّىٰ إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَجَٰوَزْنَا
- இன்னும் கடக்க வைத்தோம்
- بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ
- இஸ்ராயீலின் சந்ததிகளை/கடலை
- فَأَتْبَعَهُمْ
- பின் தொடர்ந்தனர்/ அவர்களை
- فِرْعَوْنُ
- ஃபிர்அவ்ன்
- وَجُنُودُهُۥ
- இன்னும் அவனுடைய ராணுவங்கள்
- بَغْيًا
- அழிச்சாட்டியம்
- وَعَدْوًا
- இன்னும் வரம்பு மீறி
- حَتَّىٰٓ إِذَآ
- இறுதியாக/போது
- أَدْرَكَهُ
- பிடித்தது/அவனை
- ٱلْغَرَقُ
- மூழ்குதல்
- قَالَ ءَامَنتُ
- கூறினான்/நம்பிக்கை கொண்டேன்
- أَنَّهُۥ
- நிச்சயமாக செய்தி
- لَآ
- அறவே இல்லை
- إِلَٰهَ
- இறைவன்
- إِلَّا ٱلَّذِىٓ
- தவிர/எத்தகையவன்
- ءَامَنَتْ
- நம்பிக்கை கொண்டா(ர்க)ள்
- بِهِۦ بَنُوٓا۟ إِسْرَٰٓءِيلَ
- அவனை / இஸ்ராயீலின் சந்ததிகள்
- وَأَنَا۠
- இன்னும் நான்
- مِنَ ٱلْمُسْلِمِينَ
- முஸ்லிம்களில்
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்| இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
10:90
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்