சூரா 12 ஸூரத்து யூஸுஃப், அயாஹ் 70
-
فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَايَةَ فِي رَحْلِ أَخِيهِ ثُمَّ أَذَّنَ مُؤَذِّنٌ أَيَّتُهَا الْعِيرُ إِنَّكُمْ لَسَارِقُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَلَمَّا جَهَّزَهُم
- அவர் தயார்படுத்தியபோது/அவர்களுக்கு
- بِجَهَازِهِمْ
- பொருள்களை/அவர்களுடைய
- جَعَلَ
- வைத்தார்
- ٱلسِّقَايَةَ
- குவளையை
- فِى رَحْلِ
- சுமையில்
- أَخِيهِ
- தன் சகோதரனின்
- ثُمَّ
- பிறகு
- أَذَّنَ
- அறிவித்தார்
- مُؤَذِّنٌ
- ஓர் அறிவிப்பாளர்
- أَيَّتُهَا ٱلْعِيرُ
- ஓ! பயணக் கூட்டத்தார்களே!
- إِنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- لَسَٰرِقُونَ
- திருடர்கள்தான்
பின்னர், அவர்களுடைய பொருள்களைச் சித்தம் செய்து கொடுத்த போது, தம் சகோதரர் (புன்யாமீன்) உடைய சுமையில் (பானங்கள் பருகுவதற்கான ஒரு பொற்)குவளையை (எவரும் அறியாது) வைத்து விட்டார்; (அவர்கள் புறப்பட்டுச் செல்லலானதும் அரசாங்க) அறிவிப்பாளர் ஒருவர், “ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!” என்று கூறினார்.
12:70
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்