சூரா 24 ஸூரத்துந் நூர் (பேரொளி), அயாஹ் 15
-
إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُمْ مَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِنْدَ اللَّهِ عَظِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِذْ
- ஏனெனில்
- تَلَقَّوْنَهُۥ
- அதை உங்களுக்குள் அறிவித்துக் கொண்டீர்கள்
- بِأَلْسِنَتِكُمْ
- நீங்கள்உங்கள் நாவுகளால்
- وَتَقُولُونَ
- இன்னும் அதை கூறுகிறீர்கள்
- بِأَفْوَاهِكُم
- உங்கள் வாய்களால்
- مَّا
- எதைப் பற்றி
- لَيْسَ لَكُم
- உங்களுக்கு இல்லையோ
- بِهِۦ
- அதைக் கொண்டு
- عِلْمٌ
- அறிவு
- وَتَحْسَبُونَهُۥ
- அதை கருதுகிறீர்கள்
- هَيِّنًا
- மிக இலகுவாக
- وَهُوَ
- அதுவோ இருக்கிறது
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- عَظِيمٌ
- மிகப்பெரியதாக
இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.
24:15
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்