சூரா 49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்), அயாஹ் 11

  1. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَىٰ أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَىٰ أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ ۖ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ ۚ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
    நம்பிக்கையாளர்களே!
    لَا يَسْخَرْ
    பரிகாசம் செய்ய வேண்டாம்
    قَوْمٌ
    ஒரு கூட்டம்
    مِّن قَوْمٍ
    இன்னொரு கூட்டத்தை
    عَسَىٰٓ أَن يَكُونُوا۟
    அவர்கள் இருக்கலாம்
    خَيْرًا
    சிறந்தவர்களாக
    مِّنْهُمْ
    இவர்களை விட
    وَلَا نِسَآءٌ
    பெண்களும் பரிகாசம் செய்ய வேண்டாம்
    مِّن نِّسَآءٍ
    பெண்களை
    عَسَىٰٓ أَن يَكُنَّ
    அவர்கள் இருக்கலாம்
    خَيْرًا
    சிறந்தவர்களாக
    مِّنْهُنَّ
    இவர்களை விட
    وَلَا تَلْمِزُوٓا۟
    இன்னும் குத்திப் பேச வேண்டாம்
    أَنفُسَكُمْ
    உங்களை
    وَلَا تَنَابَزُوا۟
    பட்டப் பெயர் சூட்டாதீர்கள்
    بِٱلْأَلْقَٰبِ
    தீய பட்டப் பெயர்களைக் கொண்டு
    بِئْسَ ٱلِٱسْمُ
    பெயர்களில் மிக கெட்டது
    ٱلْفُسُوقُ
    பாவிகள்
    بَعْدَ
    பின்னர்
    ٱلْإِيمَٰنِ
    நம்பிக்கை கொண்டதன்
    وَمَن لَّمْ يَتُبْ
    யார் திருந்தி திரும்பவில்லையோ
    فَأُو۟لَٰٓئِكَ هُمُ
    அவர்கள்தான்
    ٱلظَّٰلِمُونَ
    அநியாயக்காரர்கள்

    முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

    49:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்)