சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்), அயாஹ் 83
-
وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَىٰ أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ ۗ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا
- வந்தால்
- جَآءَهُمْ
- அவர்களிடம்
- أَمْرٌ
- ஒரு செய்தி
- مِّنَ
- பற்றி
- ٱلْأَمْنِ
- பாதுகாப்பு
- أَوِ
- அல்லது
- ٱلْخَوْفِ
- பயம்
- أَذَاعُوا۟
- பரப்புகின்றனர்
- بِهِۦ
- அதை
- وَلَوْ رَدُّوهُ
- அவர்கள் கொண்டு சென்றால்/அதை
- إِلَى ٱلرَّسُولِ
- தூதரிடம்
- وَإِلَىٰٓ أُو۟لِى ٱلْأَمْرِ
- இன்னும் அதிகாரிகளிடம்
- مِنْهُمْ
- அவர்களில்
- لَعَلِمَهُ
- அதை நன்கறிந்து கொள்வார்கள்
- ٱلَّذِينَ
- எவர்கள்
- يَسْتَنۢبِطُونَهُۥ
- யூகிப்பார்கள்/அதை
- مِنْهُمْ
- அவர்களில்
- وَلَوْلَا
- இல்லையென்றால்
- فَضْلُ
- அருள்
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- وَرَحْمَتُهُۥ
- இன்னும் அவனுடைய கருணை
- لَٱتَّبَعْتُمُ
- பின்பற்றி இருப்பீர்கள்
- ٱلشَّيْطَٰنَ
- ஷைத்தானை
- إِلَّا
- தவிர
- قَلِيلًا
- சிலரை
மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.
4:83
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்