சூரா 60 ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்), அயாஹ் 1
-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُمْ مِنَ الْحَقِّ يُخْرِجُونَ الرَّسُولَ وَإِيَّاكُمْ ۙ أَنْ تُؤْمِنُوا بِاللَّهِ رَبِّكُمْ إِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِي سَبِيلِي وَابْتِغَاءَ مَرْضَاتِي ۚ تُسِرُّونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَأَنَا أَعْلَمُ بِمَا أَخْفَيْتُمْ وَمَا أَعْلَنْتُمْ ۚ وَمَنْ يَفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே!
- لَا تَتَّخِذُوا۟
- எடுத்துக் கொள்ளாதீர்கள்
- عَدُوِّى
- எனதுஎதிரிகளை(யும்)
- وَعَدُوَّكُمْ
- உங்கள் எதிரிகளையும்
- أَوْلِيَآءَ
- உற்ற நண்பர்களாக
- تُلْقُونَ
- வெளிப்படுத்துகின்ற
- إِلَيْهِم
- அவர்களிடம்
- بِٱلْمَوَدَّةِ
- அன்பை
- وَقَدْ
- திட்டமாக
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- بِمَا جَآءَكُم
- உங்களிடம் வந்ததை
- مِّنَ ٱلْحَقِّ
- சத்தியத்தை
- يُخْرِجُونَ
- வெளியேற்றுகின்றனர்
- ٱلرَّسُولَ
- தூதரை(யும்)
- وَإِيَّاكُمْ
- உங்களையும்
- أَن تُؤْمِنُوا۟
- நீங்கள் நம்பிக்கை கொண்டதனால்
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- رَبِّكُمْ
- உங்கள் இறைவனாகிய
- إِن كُنتُمْ خَرَجْتُمْ
- நீங்கள் வெளியேறிஇருந்தால்
- جِهَٰدًا
- ஜிஹாது செய்வதற்காகவும்
- فِى سَبِيلِى
- எனது பாதையில்
- وَٱبْتِغَآءَ
- தேடியும்
- مَرْضَاتِى
- என் பொருத்தத்தை
- تُسِرُّونَ
- இரகசியமாக காட்டுகின்றீர்களா?
- إِلَيْهِم
- அவர்களிடம்
- بِٱلْمَوَدَّةِ
- அன்பை
- وَأَنَا۠
- நான்
- أَعْلَمُ
- நன்கறிவேன்
- بِمَآ أَخْفَيْتُمْ
- நீங்கள் மறைப்பதையும்
- وَمَآ أَعْلَنتُمْ
- நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும்
- وَمَن
- யார்
- يَفْعَلْهُ
- அதைச் செய்வாரோ
- مِنكُمْ فَقَدْ
- உங்களில்/திட்டமாக
- ضَلَّ
- வழி கெட்டுவிட்டார்
- سَوَآءَ ٱلسَّبِيلِ
- நேரான பாதையை
ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.
60:1
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்