சூரா 66 ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்), அயாஹ் 10
-
ضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ كَفَرُوا امْرَأَتَ نُوحٍ وَامْرَأَتَ لُوطٍ ۖ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ضَرَبَ
- விவரிக்கின்றான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- مَثَلًا
- ஓர் உதாரணமாக
- لِّلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரித்தவர்களுக்கு
- ٱمْرَأَتَ
- மனைவியையும்
- نُوحٍ
- நூஹூடைய
- وَٱمْرَأَتَ
- மனைவியையும்
- لُوطٍ
- லூத்துடைய
- كَانَتَا
- இருவரும் இருந்தனர்
- تَحْتَ
- கீழ்
- عَبْدَيْنِ
- இரு அடியார்களுக்கு
- مِنْ عِبَادِنَا
- நமது அடியார்களில்
- صَٰلِحَيْنِ
- நல்ல(வர்கள்)
- فَخَانَتَاهُمَا
- அவ்விருவரும் அவ்விருவருக்கும் மோசடி செய்தனர்
- فَلَمْ يُغْنِيَا
- ஆகவே, அவ்விருவரும் தடுக்கவில்லை
- عَنْهُمَا
- அவ்விருவரைவிட்டும்
- مِنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- شَيْـًٔا وَقِيلَ
- எதையும்/கூறப்பட்டது
- ٱدْخُلَا
- நீங்கள் இருவரும் நுழையுங்கள்
- ٱلنَّارَ
- நரகத்தில்
- مَعَ ٱلدَّٰخِلِينَ
- நுழைபவர்களுடன்
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
66:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்