சூரா 66 ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்), அயாஹ் 3

  1. وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَىٰ بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَنْ بَعْضٍ ۖ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنْبَأَكَ هَٰذَا ۖ قَالَ نَبَّأَنِيَ الْعَلِيمُ الْخَبِيرُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِذْ أَسَرَّ ٱلنَّبِىُّ
    இரகசியமாக பேசியபோது/நபி
    إِلَىٰ بَعْضِ
    சிலரிடம்
    أَزْوَٰجِهِۦ
    தனது மனைவிமார்களில்
    حَدِيثًا
    ஒரு பேச்சை
    فَلَمَّا نَبَّأَتْ بِهِۦ
    அவள் அறிவித்து விட்டபோது/அதை
    وَأَظْهَرَهُ
    இன்னும் அதை வெளிப்படுத்தினான்
    ٱللَّهُ
    அல்லாஹ்
    عَلَيْهِ
    அவருக்கு
    عَرَّفَ
    அவர் அறிவித்தார்
    بَعْضَهُۥ
    அதில் சிலவற்றை
    وَأَعْرَضَ
    இன்னும் புறக்கணித்து விட்டார்
    عَنۢ بَعْضٍ
    சிலவற்றை
    فَلَمَّا نَبَّأَهَا بِهِۦ
    அவர் அவளுக்கு அறிவித்த போது/அதை
    قَالَتْ
    அவள் கூறினாள்
    مَنْ
    யார்
    أَنۢبَأَكَ
    உமக்கு அறிவித்தார்
    هَٰذَا
    இதை
    قَالَ
    அவர் கூறினார்
    نَبَّأَنِىَ
    எனக்கு அறிவித்தான்
    ٱلْعَلِيمُ
    நன்கறிபவன்
    ٱلْخَبِيرُ
    ஆழ்ந்தறிபவன்

    மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான்; அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்| “(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) எனக்குத் தெரிவித்தான்” என்று (பதில்) கூறினார்.

    66:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 66 ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)