சூரா 6 ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்), அயாஹ் 130
-
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِنْكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي وَيُنْذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَٰذَا ۚ قَالُوا شَهِدْنَا عَلَىٰ أَنْفُسِنَا ۖ وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَشَهِدُوا عَلَىٰ أَنْفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا كَافِرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰمَعْشَرَ
- கூட்டமே
- ٱلْجِنِّ
- ஜின்களின்
- وَٱلْإِنسِ
- மற்றும் மனிதர்கள்
- أَلَمْ يَأْتِكُمْ
- உங்களிடம் வரவில்லையா?
- رُسُلٌ
- தூதர்கள்
- مِّنكُمْ
- உங்களிலிருந்து
- يَقُصُّونَ
- விவரிப்பவர்களாக
- عَلَيْكُمْ
- உங்களுக்கு
- ءَايَٰتِى
- என் வசனங்களை
- وَيُنذِرُونَكُمْ
- இன்னும் எச்சரிப்பவர்களாக/உங்களுக்கு
- لِقَآءَ
- சந்திப்பை
- يَوْمِكُمْ
- உங்கள் நாள்
- هَٰذَا
- இது
- قَالُوا۟
- கூறுவார்கள்
- شَهِدْنَا
- சாட்சியளித்தோம்
- عَلَىٰٓ
- எதிராக
- أَنفُسِنَا
- எங்களுக்கு
- وَغَرَّتْهُمُ
- மயக்கி விட்டது/அவர்களை
- ٱلْحَيَوٰةُ
- வாழ்வு
- ٱلدُّنْيَا
- உலகம்
- وَشَهِدُوا۟
- இன்னும் சாட்சி கூறுவார்கள்
- عَلَىٰٓ أَنفُسِهِمْ
- எதிராக/அவர்களுக்கு
- أَنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- كَانُوا۟
- இருந்தார்கள்
- كَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களாக
(மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?” (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.
6:130
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்