சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்), அயாஹ் 1 – 10
-
عَبَسَ وَتَوَلَّىٰ
அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:1 -
أَنْ جَاءَهُ الْأَعْمَىٰ
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:2 -
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:3 -
أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
80:4 -
أَمَّا مَنِ اسْتَغْنَىٰ
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
80:5 -
فَأَنْتَ لَهُ تَصَدَّىٰ
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:6 -
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:7 -
وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَىٰ
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:8 -
وَهُوَ يَخْشَىٰ
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:9 -
فَأَنْتَ عَنْهُ تَلَهَّىٰ
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
80:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்