சூரா 101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி), அயாஹ் 6 – 11

  1. فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ

    எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-

    101:6
  2. فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ

    அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.

    101:7
  3. وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ

    ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-

    101:8
  4. فَأُمُّهُ هَاوِيَةٌ

    அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.

    101:9
  5. وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ

    இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

    101:10
  6. نَارٌ حَامِيَةٌ

    அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.

    101:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்