சூரா 16 ஸூரத்துந் நஹ்ல் (தேனி), அயாஹ் 85
-
وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنْظَرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا رَءَا
- கண்டால்
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ظَلَمُوا۟
- தீங்கிழைத்தனர்
- ٱلْعَذَابَ
- வேதனையை
- فَلَا يُخَفَّفُ
- இலகுவாக்கப்படாது
- عَنْهُمْ
- அவர்களை விட்டு
- وَلَا هُمْ يُنظَرُونَ
- இன்னும் அவர்கள்அவகாசம் அளிக்கப் பட மாட்டார்கள்
அக்கிரமக்காரர்கள் (மறுமையில்) வேதனையைக் (கண்கூடாகப்) பார்க்கும்போது, (தம் வேதனையைக் குறைக்குமாறு எவ்வளவு வேண்டினாலும்) அவர்களுக்கு (வேதனை) இலேசாக்கவும் பட மாட்டாது; அன்றியும் (அவ்வேதனை பெறுவதில்) அவர்கள் தாமதப் படுத்தபடவும் மாட்டார்கள்.
16:85
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்