சூரா 17 பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்), அயாஹ் 67

  1. وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُونَ إِلَّا إِيَّاهُ ۖ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ ۚ وَكَانَ الْإِنْسَانُ كَفُورًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِذَا مَسَّكُمُ
    ஏற்பட்டால்/ உங்களுக்கு
    ٱلضُّرُّ
    தீங்கு, துன்பம்
    فِى ٱلْبَحْرِ
    கடலில்
    ضَلَّ
    மறைந்துவிடுகின்றனர்
    مَن
    எவர், எவை
    تَدْعُونَ
    பிரார்தித்தீர்கள்
    إِلَّآ
    தவிர
    إِيَّاهُ
    அவனை
    فَلَمَّا نَجَّىٰكُمْ
    அவன் பாதுகாத்தபோது/உங்களை
    إِلَى ٱلْبَرِّ
    கரையில்
    أَعْرَضْتُمْ
    புறக்கணிக்கின்றீர்கள்
    وَكَانَ
    இருக்கின்றான்
    ٱلْإِنسَٰنُ
    மனிதன்
    كَفُورًا
    மகா நன்றி கெட்டவனாக

    இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.

    17:67

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 17 பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)