சூரா 21 ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்), அயாஹ் 78
-
وَدَاوُودَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَدَاوُۥدَ
- இன்னும் தாவூது
- وَسُلَيْمَٰنَ
- இன்னும் ஸுலைமானை
- إِذْ يَحْكُمَانِ
- அவ்விருவரும் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக
- فِى ٱلْحَرْثِ
- விவசாயத்தின் விளைச்சலில்
- إِذْ نَفَشَتْ
- நுழைந்த போது
- فِيهِ غَنَمُ
- அதில்/ஆடுகள்
- ٱلْقَوْمِ
- மக்களுடைய
- وَكُنَّا
- இருந்தோம்
- لِحُكْمِهِمْ
- அவர்களின் தீர்ப்பை
- شَٰهِدِينَ
- நாம் அறிந்தவர்களாக
இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
21:78
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்