சூரா 23 ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்), அயாஹ் 27
-
فَأَوْحَيْنَا إِلَيْهِ أَنِ اصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا فَإِذَا جَاءَ أَمْرُنَا وَفَارَ التَّنُّورُ ۙ فَاسْلُكْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ مِنْهُمْ ۖ وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا ۖ إِنَّهُمْ مُغْرَقُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَوْحَيْنَآ
- நாம் வஹீ அறிவித்தோம்
- إِلَيْهِ
- அவருக்கு
- أَنِ ٱصْنَعِ
- நீர் செய்வீராக
- ٱلْفُلْكَ
- கப்பலை
- بِأَعْيُنِنَا
- நமது கண்களுக்கு முன்னும்
- وَوَحْيِنَا
- நமது அறிவிப்பின்படியும்
- فَإِذَا جَآءَ
- வந்துவிட்டால்
- أَمْرُنَا
- நம் கட்டளை
- وَفَارَ
- பொங்க ஆரம்பித்து விட்டால்
- ٱلتَّنُّورُ
- அடுப்பு
- فَٱسْلُكْ فِيهَا
- அதில்/ஏற்றுவீராக
- مِن كُلٍّ
- எல்லாவற்றிலிருந்தும்
- زَوْجَيْنِ
- ஜோடிகளையும்
- ٱثْنَيْنِ
- இரண்டு
- وَأَهْلَكَ
- இன்னும் உமது குடும்பத்தினரையும்
- إِلَّا
- தவிர
- مَن
- எவன்
- سَبَقَ
- முந்திவிட்டதோ
- عَلَيْهِ
- அவன் மீது
- ٱلْقَوْلُ
- வாக்கு
- مِنْهُمْ
- அவர்களில்
- وَلَا تُخَٰطِبْنِى
- இன்னும் என்னிடம் நீர் உரையாடாதீர்
- فِى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟
- அநியாயக்காரர்கள் விஷயத்தில்
- إِنَّهُم
- நிச்சயமாக அவர்கள்
- مُّغْرَقُونَ
- மூழ்கடிக்கப்படுவார்கள்
அதற்கு, “நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடும்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும்| அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று அவருக்கு நாம் அறிவித்தோம்.
23:27
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்