சூரா 24 ஸூரத்துந் நூர் (பேரொளி), அயாஹ் 62
-
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَإِذَا كَانُوا مَعَهُ عَلَىٰ أَمْرٍ جَامِعٍ لَمْ يَذْهَبُوا حَتَّىٰ يَسْتَأْذِنُوهُ ۚ إِنَّ الَّذِينَ يَسْتَأْذِنُونَكَ أُولَٰئِكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ ۚ فَإِذَا اسْتَأْذَنُوكَ لِبَعْضِ شَأْنِهِمْ فَأْذَنْ لِمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللَّهَ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்கள் எல்லாம்
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- உண்மைப்படுத்தியவர்கள்தான்
- بِٱللَّهِ
- இன்னும் அல்லாஹ்வையும்
- وَرَسُولِهِۦ
- இன்னும் அவனது தூதரையும்
- وَإِذَا كَانُوا۟
- அவர்கள் இருந்தால்
- مَعَهُۥ
- அவருடன்
- عَلَىٰٓ أَمْرٍ
- ஒரு காரியத்தில்
- جَامِعٍ
- பொது
- لَّمْ يَذْهَبُوا۟
- செல்ல மாட்டார்கள்
- حَتَّىٰ يَسْتَـْٔذِنُوهُ
- அவரிடம் அவர்கள் அனுமதி கேட்காமல்
- إِنَّ ٱلَّذِينَ يَسْتَـْٔذِنُونَكَ
- நிச்சயமாக உங்களிடம் அனுமதி கேட்பவர்கள்
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்தான்
- ٱلَّذِينَ يُؤْمِنُونَ
- உண்மைப்படுத்தியவர்கள்
- بِٱللَّهِ
- அல்லாஹ்வையும்
- وَرَسُولِهِۦ
- இன்னும் அவனது தூதரையும்
- فَإِذَا ٱسْتَـْٔذَنُوكَ
- ஆகவே, அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால்
- لِبَعْضِ
- சில
- شَأْنِهِمْ
- தங்களின் காரியத்திற்கு
- فَأْذَن
- அனுமதி அளிப்பீராக
- لِّمَن شِئْتَ
- நீர் நாடியவருக்கு
- مِنْهُمْ
- அவர்களில்
- وَٱسْتَغْفِرْ
- இன்னும் பாவமன்னிப்புக் கோருவீராக
- لَهُمُ
- அவர்களுக்காக
- ٱللَّهَ
- அல்லாஹ்விடம்
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- رَّحِيمٌ
- பெரும் கருணையாளன்
அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக; இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்.
24:62
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்