சூரா 28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்), அயாஹ் 20
-
وَجَاءَ رَجُلٌ مِنْ أَقْصَى الْمَدِينَةِ يَسْعَىٰ قَالَ يَا مُوسَىٰ إِنَّ الْمَلَأَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ فَاخْرُجْ إِنِّي لَكَ مِنَ النَّاصِحِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَجَآءَ
- இன்னும் வந்தார்
- رَجُلٌ
- ஓர் ஆடவர்
- مِّنْ أَقْصَا
- இறுதியிலிருந்து
- ٱلْمَدِينَةِ
- நகரத்தின்
- يَسْعَىٰ
- விரைந்தவராக
- قَالَ
- கூறினார்
- يَٰمُوسَىٰٓ
- மூஸாவே!
- إِنَّ
- நிச்சயமாக
- ٱلْمَلَأَ
- பிரமுகர்கள்
- يَأْتَمِرُونَ
- ஆலோசிக்கின்றனர்
- بِكَ
- உமக்காக
- لِيَقْتُلُوكَ
- அவர்கள் உம்மைக் கொல்வதற்கு
- فَٱخْرُجْ
- ஆகவே, நீர் வெளியேறிவிடும்!
- إِنِّى
- நிச்சயமாக நான்
- لَكَ
- உமக்கு
- مِنَ ٱلنَّٰصِحِينَ
- நன்மையை நாடுபவர்களில் ஒருவன்
பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.
28:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்