சூரா 28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்), அயாஹ் 9
-
وَقَالَتِ امْرَأَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِي وَلَكَ ۖ لَا تَقْتُلُوهُ عَسَىٰ أَنْ يَنْفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا وَهُمْ لَا يَشْعُرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَقَالَتِ
- கூறினாள்
- ٱمْرَأَتُ
- மனைவி
- فِرْعَوْنَ
- ஃபிர்அவ்னின்
- قُرَّتُ
- குளிர்ச்சியாகும்
- عَيْنٍ
- கண்
- لِّى وَلَكَ
- எனக்கும் உனக்கும்
- لَا تَقْتُلُوهُ
- அதைக் கொல்லாதீர்கள்!
- عَسَىٰٓ أَن يَنفَعَنَآ
- அது நமக்கு நன்மை தரலாம்
- أَوْ نَتَّخِذَهُۥ
- அல்லது அதை நாம் வைத்துக்கொள்ளலாம்
- وَلَدًا
- பிள்ளையாக
- وَهُمْ
- இன்னும் அவர்கள்
- لَا يَشْعُرُونَ
- உணரவில்லை
இன்னும்| (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.
28:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்