சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 144
-
قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا ۚ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ ۗ وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَدْ نَرَىٰ
- திட்டமாக காண்கிறோம்
- تَقَلُّبَ
- திரும்புவதை
- وَجْهِكَ
- உம் முகம்
- فِى ٱلسَّمَآءِ
- வானத்தின் பக்கம்
- فَلَنُوَلِّيَنَّكَ
- ஆகவே நிச்சயமாக திருப்புவோம்/உம்மை
- قِبْلَةً
- ஒரு கிப்லாவிற்கு
- تَرْضَىٰهَا
- நீர்அதைவிரும்புகிறீர்
- فَوَلِّ
- எனவே திருப்புவீராக
- وَجْهَكَ
- உம் முகத்தை
- شَطْرَ
- பக்கம்
- ٱلْمَسْجِدِ
- அல் மஸ்ஜிது
- ٱلْحَرَامِ
- புனிதமான
- وَحَيْثُ مَا كُنتُمْ
- நீங்கள் எங்கிருந்தாலும்
- فَوَلُّوا۟
- திருப்புங்கள்
- وُجُوهَكُمْ
- உங்கள் முகங்களை
- شَطْرَهُۥ
- அதன் பக்கம்
- وَإِنَّ
- இன்னும் நிச்சயமாக
- ٱلَّذِينَ
- எவர்கள்
- أُوتُوا۟
- கொடுக்கப்பட்டார்கள்
- ٱلْكِتَٰبَ
- வேதம்
- لَيَعْلَمُونَ
- திட்டமாக அறிவார்கள்
- أَنَّهُ
- நிச்சயமாக அது
- ٱلْحَقُّ
- உண்மை
- مِن
- இருந்து
- رَّبِّهِمْ
- தங்கள் இறைவன்
- وَمَا ٱللَّهُ
- இன்னும் இல்லை/அல்லாஹ்
- بِغَٰفِلٍ
- கவனமற்றவனாக
- عَمَّا
- எதைப்பற்றி
- يَعْمَلُونَ
- செய்கிறார்கள்
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
2:144
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்