சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 150
-
وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمِنْ حَيْثُ خَرَجْتَ
- இன்னும் நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்
- فَوَلِّ
- திருப்புவீராக
- وَجْهَكَ
- உம் முகத்தை
- شَطْرَ
- பக்கம்
- ٱلْمَسْجِدِ
- அல் மஸ்ஜிது
- ٱلْحَرَامِ
- புனிதமான
- وَحَيْثُ مَا كُنتُمْ
- நீங்கள் எங்கிருந்தாலும்
- فَوَلُّوا۟
- திருப்புங்கள்
- وُجُوهَكُمْ
- உங்கள் முகங்களை
- شَطْرَهُۥ
- அதன் பக்கம்
- لِئَلَّا يَكُونَ
- ஆகாமல் இருப்பதற்காக
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- عَلَيْكُمْ
- உங்களுக்கெதிராக
- حُجَّةٌ
- ஓர் ஆதாரம்
- إِلَّا
- தவிர
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ظَلَمُوا۟
- அநியாயம் செய்தார்கள்
- مِنْهُمْ
- அவர்களில்
- فَلَا تَخْشَوْهُمْ
- ஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள்
- وَٱخْشَوْنِى
- இன்னும் என்னைப் பயப்படுங்கள்
- وَلِأُتِمَّ
- இன்னும் நான் முழுமைப்படுத்துவதற்காக
- نِعْمَتِى
- என் அருட்கொடையை
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ
- இன்னும் நீங்கள் நேர்வழி அடைவதற்கு
ஆகவே(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருட் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).
2:150
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்