சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 177
-
لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَىٰ حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا ۖ وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ ۗ أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَّيْسَ
- அல்ல
- ٱلْبِرَّ
- நன்மை
- أَن تُوَلُّوا۟
- நீங்கள் திருப்புவது
- وُجُوهَكُمْ
- உங்கள் முகங்களை
- قِبَلَ
- நோக்கி
- ٱلْمَشْرِقِ
- கிழக்கு
- وَٱلْمَغْرِبِ
- இன்னும் மேற்கு
- وَلَٰكِنَّ
- எனினும்
- ٱلْبِرَّ
- நன்மை
- مَنْ
- எவர்
- ءَامَنَ
- நம்பிக்கை கொண்டார்
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
- இன்னும் இறுதி நாள்
- وَٱلْمَلَٰٓئِكَةِ
- இன்னும் வானவர்கள்
- وَٱلْكِتَٰبِ
- இன்னும் வேதம்
- وَٱلنَّبِيِّۦنَ
- இன்னும் நபிமார்கள்
- وَءَاتَى
- இன்னும் கொடுத்தார்
- ٱلْمَالَ
- செல்வத்தை
- عَلَىٰ
- உடன்
- حُبِّهِۦ
- அதன் விருப்பம்
- ذَوِى ٱلْقُرْبَىٰ
- உறவினர்களுக்கு
- وَٱلْيَتَٰمَىٰ
- இன்னும் அநாதைகளுக்கு
- وَٱلْمَسَٰكِينَ
- இன்னும் ஏழைகளுக்கு
- وَٱبْنَ ٱلسَّبِيلِ
- இன்னும் வழிப்போக்கருக்கு
- وَٱلسَّآئِلِينَ
- இன்னும் யாசகர்களுக்கு
- وَفِى ٱلرِّقَابِ
- இன்னும் அடிமைகளுக்கு
- وَأَقَامَ
- இன்னும் நிலைநிறுத்தினார்
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- وَءَاتَى
- இன்னும் கொடுத்தார்
- ٱلزَّكَوٰةَ
- ஸகாத்தை
- وَٱلْمُوفُونَ
- இன்னும் நிறைவேற்றுபவர்கள்
- بِعَهْدِهِمْ
- ஒப்பந்தத்தை தங்கள்
- إِذَا عَٰهَدُوا۟
- அவர்கள் ஒப்பந்தம் செய்தால்
- وَٱلصَّٰبِرِينَ
- இன்னும் பொறுமையாளர்கள்
- فِى ٱلْبَأْسَآءِ
- கொடிய வறுமையில்
- وَٱلضَّرَّآءِ
- இன்னும் நோய்
- وَحِينَ ٱلْبَأْسِ
- இன்னும் போர் சமயத்தில்
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- ٱلَّذِينَ صَدَقُوا۟
- உண்மையாளர்கள்
- وَأُو۟لَٰٓئِكَ هُمُ
- இன்னும் அவர்கள்தான்
- ٱلْمُتَّقُونَ
- அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).
2:177
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்