சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 187

  1. أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّ ۗ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُونَ أَنْفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ ۖ فَالْآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ ۚ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ ۚ وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أُحِلَّ
    அனுமதிக்கப்பட்டுள்ளது
    لَكُمْ
    உங்களுக்கு
    لَيْلَةَ
    இரவில்
    ٱلصِّيَامِ
    நோன்பு
    ٱلرَّفَثُ
    சேர்வது
    إِلَىٰ نِسَآئِكُمْ
    உங்கள் மனைவிகளுடன்
    هُنَّ
    அவர்கள் (பெண்கள்)
    لِبَاسٌ
    ஆடை
    لَّكُمْ
    உங்களுக்கு
    وَأَنتُمْ
    இன்னும் நீங்கள்(ஆண்கள்)
    لِبَاسٌ
    ஆடை
    لَّهُنَّ
    அவர்களுக்கு (பெண்களுக்கு)
    عَلِمَ
    அறிவான்
    ٱللَّهُ
    அல்லாஹ்
    أَنَّكُمْ
    நிச்சயமாக நீங்கள்
    كُنتُمْ
    இருந்தீர்கள்
    تَخْتَانُونَ
    ஏமாற்றுகிறீர்கள்
    أَنفُسَكُمْ
    உங்களை
    فَتَابَ عَلَيْكُمْ
    ஆகவே உங்கள் பிழை பொறுப்பை ஏற்றான்
    وَعَفَا
    இன்னும் மன்னித்தான்
    عَنكُمْ
    உங்களை
    فَٱلْـَٰٔنَ
    ஆகவே இப்போது
    بَٰشِرُوهُنَّ
    அவர்களுடன் சேருங்கள்
    وَٱبْتَغُوا۟
    இன்னும் தேடுங்கள்
    مَا كَتَبَ
    எதை/விதித்தான்
    ٱللَّهُ
    அல்லாஹ்
    لَكُمْ
    உங்களுக்கு
    وَكُلُوا۟
    இன்னும் உண்ணுங்கள்
    وَٱشْرَبُوا۟
    இன்னும் பருகுங்கள்
    حَتَّىٰ يَتَبَيَّنَ
    தெளிவாகும் வரை
    لَكُمُ
    உங்களுக்கு
    ٱلْخَيْطُ ٱلْأَبْيَضُ
    நூல்/வெள்ளை
    مِنَ ٱلْخَيْطِ
    இருந்து/நூல்
    ٱلْأَسْوَدِ
    கருப்பு
    مِنَ ٱلْفَجْرِ
    அதிகாலையில்
    ثُمَّ
    பிறகு
    أَتِمُّوا۟
    முழுமையாக்குங்கள்
    ٱلصِّيَامَ
    நோன்பை
    إِلَى ٱلَّيْلِ
    இரவு வரை
    وَلَا تُبَٰشِرُوهُنَّ
    அவர்களுடன் சேராதீர்கள்
    وَأَنتُمْ
    போது/நீங்கள்
    عَٰكِفُونَ
    தங்கியிருக்கிறீர்கள்
    فِى ٱلْمَسَٰجِدِ
    மஸ்ஜிதுகளில்
    تِلْكَ
    இவை
    حُدُودُ
    சட்டங்கள்
    ٱللَّهِ
    அல்லாஹ்வுடைய
    فَلَا تَقْرَبُوهَا
    எனவே அவற்றை நெருங்காதீர்கள்
    كَذَٰلِكَ
    அவ்வாறே
    يُبَيِّنُ
    தெளிவுபடுத்துகிறான்
    ٱللَّهُ
    அல்லாஹ்
    ءَايَٰتِهِۦ
    தன் வசனங்களை
    لِلنَّاسِ
    மக்களுக்கு
    لَعَلَّهُمْ يَتَّقُونَ
    அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக

    நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

    2:187

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு)