சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 235

  1. وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُمْ بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ أَوْ أَكْنَنْتُمْ فِي أَنْفُسِكُمْ ۚ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَٰكِنْ لَا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّا أَنْ تَقُولُوا قَوْلًا مَعْرُوفًا ۚ وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنْفُسِكُمْ فَاحْذَرُوهُ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَا جُنَاحَ
    இன்னும் குற்றமில்லை
    عَلَيْكُمْ فِيمَا
    உங்கள் மீது/எதில்
    عَرَّضْتُم
    சூசகமாக எடுத்துக் கூறினீர்கள்
    بِهِۦ
    அதை
    مِنْ
    இருந்து
    خِطْبَةِ ٱلنِّسَآءِ
    பெண் பேசுவது
    أَوْ
    அல்லது
    أَكْنَنتُمْ
    மறைத்தீர்கள்
    فِىٓ أَنفُسِكُمْ
    உங்கள் உள்ளங்களில்
    عَلِمَ
    அறிவான்
    ٱللَّهُ
    அல்லாஹ்
    أَنَّكُمْ
    நிச்சயமாக நீங்கள்
    سَتَذْكُرُونَهُنَّ
    அவர்களை நினைப்பீர்கள்
    وَلَٰكِن
    எனினும்
    لَّا تُوَاعِدُوهُنَّ
    அவர்களுக்கு வாக்குறுதி அளிக்காதீர்கள்
    سِرًّا
    இரகசியமாக
    إِلَّآ
    தவிர
    أَن تَقُولُوا۟
    நீங்கள் கூறுவது
    قَوْلًا
    கூற்று
    مَّعْرُوفًا
    நல்ல
    وَلَا تَعْزِمُوا۟
    உறுதி செய்யாதீர்கள்
    عُقْدَةَ
    ஒப்பந்தத்தை
    ٱلنِّكَاحِ
    திருமணம்
    حَتَّىٰ يَبْلُغَ
    அடையும் வரை
    ٱلْكِتَٰبُ
    விதிக்கப்பட்ட சட்டம்
    أَجَلَهُۥ
    அதனுடைய தவணை
    وَٱعْلَمُوٓا۟
    இன்னும் அறியுங்கள்
    أَنَّ
    நிச்சயமாக
    ٱللَّهَ
    அல்லாஹ்
    يَعْلَمُ
    அறிவான்
    مَا
    எவற்றை
    فِىٓ أَنفُسِكُمْ
    உங்கள் உள்ளங்களில்
    فَٱحْذَرُوهُ
    எனவே, அவனைப் பயப்படுங்கள்
    وَٱعْلَمُوٓا۟
    இன்னும் அறியுங்கள்
    أَنَّ ٱللَّهَ
    நிச்சயமாக அல்லாஹ்
    غَفُورٌ
    மகா மன்னிப்பாளன்
    حَلِيمٌ
    பெரும் சகிப்பாளன்

    (இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்; ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்; இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்; அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    2:235

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு)