சூரா 30 ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு), அயாஹ் 48
-
اللَّهُ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ فَتُثِيرُ سَحَابًا فَيَبْسُطُهُ فِي السَّمَاءِ كَيْفَ يَشَاءُ وَيَجْعَلُهُ كِسَفًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ ۖ فَإِذَا أَصَابَ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱللَّهُ ٱلَّذِى
- அல்லாஹ்தான்
- يُرْسِلُ
- அனுப்புகின்றான்.
- ٱلرِّيَٰحَ
- காற்றுகளை
- فَتُثِيرُ
- அவை கிளப்புகின்றன
- سَحَابًا
- மேகங்களை
- فَيَبْسُطُهُۥ
- அவன் அவற்றை பரப்புகின்றான்
- فِى ٱلسَّمَآءِ
- வானத்தில்
- كَيْفَ يَشَآءُ
- தான் நாடியவாறு
- وَيَجْعَلُهُۥ
- அவற்றை அவன் மாற்றுகின்றான்
- كِسَفًا
- பல துண்டுகளாக
- فَتَرَى
- ஆகவே நீர் பார்க்கிறீர்
- ٱلْوَدْقَ
- மழையை
- يَخْرُجُ
- அது வெளியேறக்கூடியதாக
- مِنْ خِلَٰلِهِۦ
- அவற்றுக்கு இடையிலிருந்து
- فَإِذَآ أَصَابَ
- அவன் அடையச் செய்தால்
- بِهِۦ
- அதை
- مَن يَشَآءُ
- தான் நாடியவர்களுக்கு
- مِنْ عِبَادِهِۦٓ
- தனது அடியார்களில்
- إِذَا هُمْ
- அப்போது அவர்கள்
- يَسْتَبْشِرُونَ
- மகிழ்ச்சியடைகிறார்கள்
அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்வடைகிறார்கள்.
30:48
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்