சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்), அயாஹ் 35

  1. إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ ٱلْمُسْلِمِينَ
    நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள்
    وَٱلْمُسْلِمَٰتِ
    இன்னும் முஸ்லிமான பெண்கள்
    وَٱلْمُؤْمِنِينَ
    இன்னும் முஃமினான ஆண்கள்
    وَٱلْمُؤْمِنَٰتِ
    இன்னும் முஃமினான பெண்கள்
    وَٱلْقَٰنِتِينَ
    இன்னும் பணிவான ஆண்கள்
    وَٱلْقَٰنِتَٰتِ
    இன்னும் பணிவான பெண்கள்
    وَٱلصَّٰدِقِينَ
    இன்னும் உண்மையான ஆண்கள்
    وَٱلصَّٰدِقَٰتِ
    இன்னும் உண்மையான பெண்கள்
    وَٱلصَّٰبِرِينَ
    இன்னும் பொறுமையான ஆண்கள்
    وَٱلصَّٰبِرَٰتِ
    இன்னும் பொறுமையான பெண்கள்
    وَٱلْخَٰشِعِينَ
    இன்னும் உள்ளச்சமுடைய ஆண்கள்
    وَٱلْخَٰشِعَٰتِ
    இன்னும் உள்ளச்சமுடைய பெண்கள்
    وَٱلْمُتَصَدِّقِينَ
    இன்னும் தர்மம் செய்கின்ற ஆண்கள்
    وَٱلْمُتَصَدِّقَٰتِ
    இன்னும் தர்மம் செய்கின்ற பெண்கள்
    وَٱلصَّٰٓئِمِينَ
    இன்னும் நோன்பாளியான ஆண்கள்
    وَٱلصَّٰٓئِمَٰتِ
    இன்னும் நோன்பாளியான பெண்கள்
    وَٱلْحَٰفِظِينَ
    இன்னும் பேணுகின்ற ஆண்கள்
    فُرُوجَهُمْ
    இன்னும் தங்கள் மறைவிடங்களை
    وَٱلْحَٰفِظَٰتِ
    இன்னும் பேணுகின்ற பெண்கள்
    وَٱلذَّٰكِرِينَ
    இன்னும் நினைவு கூரக்கூடிய ஆண்கள்
    ٱللَّهَ
    அல்லாஹ்வை
    كَثِيرًا
    அதிகம்
    وَٱلذَّٰكِرَٰتِ
    இன்னும் நினைவு கூரக்கூடிய பெண்கள்
    أَعَدَّ ٱللَّهُ
    ஏற்படுத்தி இருக்கின்றான்/அல்லாஹ்
    لَهُم
    இவர்களுக்கு
    مَّغْفِرَةً
    மன்னிப்பை(யும்)
    وَأَجْرًا
    கூலியையும்
    عَظِيمًا
    மகத்தான

    நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

    33:35

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்)