சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்), அயாஹ் 50
-
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَحْلَلْنَا لَكَ أَزْوَاجَكَ اللَّاتِي آتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّاتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَالَاتِكَ اللَّاتِي هَاجَرْنَ مَعَكَ وَامْرَأَةً مُؤْمِنَةً إِنْ وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَنْ يَسْتَنْكِحَهَا خَالِصَةً لَكَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ ۗ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
- நபியே!
- إِنَّآ
- நிச்சயமாக நாம்
- أَحْلَلْنَا
- ஆகுமாக்கினோம்
- لَكَ
- உமக்கு
- أَزْوَٰجَكَ
- உமது மனைவிகளை(யும்)
- ٱلَّٰتِىٓ
- எவர்கள்
- ءَاتَيْتَ
- நீர் கொடுத்தீர்
- أُجُورَهُنَّ
- திருமணக் கொடைகளை அவர்களின்
- وَمَا
- இன்னும் எவர்கள்
- مَلَكَتْ
- சொந்தமாகிய(து)
- يَمِينُكَ
- உமது வலக்கரம்
- مِمَّآ أَفَآءَ ٱللَّهُ
- அல்லாஹ் போரில் கொடுத்தவர்களிலிருந்து
- عَلَيْكَ
- உமக்கு
- وَبَنَاتِ
- மகள்களையும்
- عَمِّكَ
- உமது சாச்சாவின்
- وَبَنَاتِ
- மகள்களையும்
- عَمَّٰتِكَ
- உமது மாமியின்
- وَبَنَاتِ
- மகள்களையும்
- خَالِكَ
- உமது தாய் மாமாவின்
- وَبَنَاتِ
- மகள்களையும்
- خَٰلَٰتِكَ
- உமது காலாவின்
- ٱلَّٰتِى
- எவர்கள்
- هَاجَرْنَ
- ஹிஜ்ரா செய்தனர்
- مَعَكَ
- உம்முடன்
- وَٱمْرَأَةً
- இன்னும் ஒரு பெண்
- مُّؤْمِنَةً
- முஃமினான
- إِن وَهَبَتْ
- அன்பளிப்பு செய்தால்
- نَفْسَهَا
- தன்னை
- لِلنَّبِىِّ
- நபிக்கு
- إِنْ أَرَادَ
- நாடினால்
- ٱلنَّبِىُّ
- நபி(யும்)
- أَن يَسْتَنكِحَهَا
- அவளை மணமுடிக்க
- خَالِصَةً
- பிரத்தியோகமாகும்
- لَّكَ
- உமக்கு மட்டும்
- مِن دُونِ
- அன்றி
- ٱلْمُؤْمِنِينَ
- முஃமின்கள்
- قَدْ
- திட்டமாக
- عَلِمْنَا
- நாம் அறிவோம்
- مَا فَرَضْنَا
- நாம் கடமையாக்கியதை
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- فِىٓ أَزْوَٰجِهِمْ
- அவர்களின் மனைவிமார்களின் விஷயத்தில்
- وَمَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ
- இன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள்
- لِكَيْلَا يَكُونَ
- இருக்கக் கூடாது என்பதற்காக
- عَلَيْكَ
- உமக்கு
- حَرَجٌ
- சிரமம்
- وَكَانَ ٱللَّهُ
- அல்லாஹ் இருக்கின்றான்
- غَفُورًا
- மன்னிப்பாளனாக,
- رَّحِيمًا
- பெரும் கருணையாளனாக
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
33:50
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்