சூரா 35 ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்), அயாஹ் 43

  1. اسْتِكْبَارًا فِي الْأَرْضِ وَمَكْرَ السَّيِّئِ ۚ وَلَا يَحِيقُ الْمَكْرُ السَّيِّئُ إِلَّا بِأَهْلِهِ ۚ فَهَلْ يَنْظُرُونَ إِلَّا سُنَّتَ الْأَوَّلِينَ ۚ فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَبْدِيلًا ۖ وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَحْوِيلًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱسْتِكْبَارًا
    பெருமையடிப்பதை(யும்)
    فِى ٱلْأَرْضِ
    பூமியில்
    وَمَكْرَ
    சூழ்ச்சி செய்வதையும்
    ٱلسَّيِّئِ
    தீய(து)
    وَلَا يَحِيقُ
    சூழ்ந்துகொள்ளாது
    ٱلْمَكْرُ
    சூழ்ச்சி
    ٱلسَّيِّئُ
    தீய(து)
    إِلَّا
    தவிர
    بِأَهْلِهِۦ
    அதை செய்தவர்களை
    فَهَلْ يَنظُرُونَ
    இவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
    إِلَّا سُنَّتَ
    வழிமுறையைத் தவிர
    ٱلْأَوَّلِينَ
    முன் சென்றோரின்
    فَلَن تَجِدَ
    அறவே நீர் காணமாட்டீர்
    لِسُنَّتِ
    வழிமுறையில்
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    تَبْدِيلًا
    மாற்றத்தை
    وَلَن تَجِدَ
    இன்னும் நீர் காணமாட்டீர்
    لِسُنَّتِ
    வழிமுறையில்
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    تَحْوِيلًا
    எவ்வித திருப்பத்தை

    (அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது; இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.

    35:43

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 35 ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)