சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்), அயாஹ் 49
-
وَرَسُولًا إِلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ ۖ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ ۖ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَىٰ بِإِذْنِ اللَّهِ ۖ وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَرَسُولًا
- இன்னும் தூதராக
- إِلَىٰ
- பக்கம்
- بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- இஸ்ரவேலர்கள்
- أَنِّى
- நிச்சயமாக நான்
- قَدْ جِئْتُكُم
- உங்களிடம் வந்திருக்கின்றேன்
- بِـَٔايَةٍ
- ஓர் அத்தாட்சியைக் கொண்டு
- مِّن رَّبِّكُمْ
- உங்கள் இறைவனிடமிருந்து
- أَنِّىٓ
- நிச்சயமாக நான்
- أَخْلُقُ
- படைப்பேன்
- لَكُم
- உங்களுக்கு
- مِّنَ ٱلطِّينِ
- களிமண்ணிலிருந்து
- كَهَيْـَٔةِ
- அமைப்பைப் போல்
- ٱلطَّيْرِ
- பறவையின்
- فَأَنفُخُ فِيهِ
- இன்னும் ஊதுவேன்/அதில்
- فَيَكُونُ
- (அது) ஆகிவிடும்
- طَيْرًۢا
- பறவையாக
- بِإِذْنِ
- அனுமதி கொண்டு
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- وَأُبْرِئُ
- இன்னும் குணப்படுத்துவேன்
- ٱلْأَكْمَهَ
- பிறவிக் குருடரை
- وَٱلْأَبْرَصَ
- இன்னும் வெண்குஷ்டரை
- وَأُحْىِ
- இன்னும் உயிர்ப்பிப்பேன்
- ٱلْمَوْتَىٰ
- மரணித்தோரை
- بِإِذْنِ
- அனுமதி கொண்டு
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- وَأُنَبِّئُكُم
- இன்னும் உங்களுக்கு அறிவிப்பேன்
- بِمَا تَأْكُلُونَ
- எதை/புசிக்கிறீர்கள்
- وَمَا
- இன்னும் எது
- تَدَّخِرُونَ
- சேமிக்கிறீர்கள்
- فِى بُيُوتِكُمْ
- உங்கள் வீடுகளில்
- إِنَّ فِى ذَٰلِكَ
- நிச்சயமாக/இதில்
- لَءَايَةً
- திட்டமாக ஓர் அத்தாட்சி
- لَّكُمْ
- உங்களுக்கு
- إِن كُنتُم
- நீங்கள் இருந்தால்
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்|) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).
3:49
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்