சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, அயாஹ் 44
-
وَلَوْ جَعَلْنَاهُ قُرْآنًا أَعْجَمِيًّا لَقَالُوا لَوْلَا فُصِّلَتْ آيَاتُهُ ۖ أَأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ ۗ قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ ۖ وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي آذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى ۚ أُولَٰئِكَ يُنَادَوْنَ مِنْ مَكَانٍ بَعِيدٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَوْ جَعَلْنَٰهُ
- நாம் இதை ஆக்கி இருந்தால்
- قُرْءَانًا
- குர்ஆனாக
- أَعْجَمِيًّا
- அரபி அல்லாத மொழி
- لَّقَالُوا۟
- கூறியிருப்பார்கள்
- لَوْلَا فُصِّلَتْ
- விவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா?
- ءَايَٰتُهُۥٓ
- இதன் வசனங்கள்
- ءَا۬عْجَمِىٌّ
- அரபி அல்லாத ஒரு மொழியிலா!
- وَعَرَبِىٌّ
- இன்னும் அரபி ஆயிற்றே !
- قُلْ هُوَ
- கூறுவீராக!/இது
- لِلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்களுக்கு
- هُدًى
- நேர்வழி(யும்)
- وَشِفَآءٌ
- நிவாரணமும்
- وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
- எவர்கள்/நம்பிக்கை கொள்ளவில்லையோ
- فِىٓ ءَاذَانِهِمْ
- அவர்களின் காதுகளில்
- وَقْرٌ
- செவிட்டுத்தனம்
- وَهُوَ
- அது
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- عَمًى
- மறைந்திருக்கிறது
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- يُنَادَوْنَ
- அழைக்கப்படுவார்கள்
- مِن مَّكَانٍۭ
- இடத்தில் இருந்து
- بَعِيدٍ
- மிக தூரமான
நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).
41:44
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்