சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, அயாஹ் 51
-
وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنْسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَآ أَنْعَمْنَا
- நாம் அருள் புரிந்தால்
- عَلَى ٱلْإِنسَٰنِ
- மனிதன் மீது
- أَعْرَضَ
- புறக்கணித்து செல்கிறான்
- وَنَـَٔا بِجَانِبِهِۦ
- தூரமாகி விடுகிறான்
- وَإِذَا مَسَّهُ
- இன்னும் அவனுக்குநிகழ்ந்தால்
- ٱلشَّرُّ
- தீங்கு
- فَذُو دُعَآءٍ
- பிரார்த்தனை உடையவனாக
- عَرِيضٍ
- மிக அதிகமான
அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான்.
41:51
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்