சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, அயாஹ் 53
-
سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ ۗ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- سَنُرِيهِمْ
- விரைவில் அவர்களுக்கு நாம் காண்பிப்போம்
- ءَايَٰتِنَا
- நமது அத்தாட்சிகளை
- فِى ٱلْءَافَاقِ
- பல பகுதிகளிலும்
- وَفِىٓ أَنفُسِهِمْ
- அவர்களிலும்
- حَتَّىٰ
- இறுதியாக
- يَتَبَيَّنَ
- தெளிவாகிவிடும்
- لَهُمْ
- அவர்களுக்கு
- أَنَّهُ
- நிச்சயமாக இதுதான்
- ٱلْحَقُّ
- உண்மை
- أَوَلَمْ يَكْفِ
- போதாதா?
- بِرَبِّكَ
- உமது இறைவனுக்கு
- أَنَّهُۥ
- நிச்சயமாக தான்
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- شَهِيدٌ
- நன்கு பார்ப்பவனாக
நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
41:53
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்