சூரா 46 ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்), அயாஹ் 20

  1. وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَيَوْمَ يُعْرَضُ
    சமர்ப்பிக்கப்படுகின்ற நாளில்
    ٱلَّذِينَ كَفَرُوا۟
    நிராகரிப்பாளர்கள்
    عَلَى ٱلنَّارِ
    நரகத்தின் முன்
    أَذْهَبْتُمْ
    நீங்கள் போக்கிக் கொண்டீர்கள்
    طَيِّبَٰتِكُمْ
    உங்கள் நன்மைகளை
    فِى حَيَاتِكُمُ
    உங்கள் வாழ்க்கையிலே
    ٱلدُّنْيَا
    உலக
    وَٱسْتَمْتَعْتُم
    இன்னும் இன்பம் அடைந்தீர்கள்
    بِهَا
    அவற்றின் மூலம்
    فَٱلْيَوْمَ
    ஆகவே இன்றைய தினம்
    تُجْزَوْنَ
    கூலியாக கொடுக்கப்படுவீர்கள்
    عَذَابَ
    தண்டனையை
    ٱلْهُونِ
    கேவலமான
    بِمَا كُنتُمْ
    நீங்கள் இருந்த காரணத்தாலும்
    تَسْتَكْبِرُونَ
    நீங்கள் பெருமையடிப்பவர்களாக
    فِى ٱلْأَرْضِ
    பூமியில்
    بِغَيْرِ ٱلْحَقِّ
    அநியாயமாக
    وَبِمَا كُنتُمْ
    நீங்கள் இருந்த காரணத்தாலும்
    تَفْسُقُونَ
    நீங்கள் பாவம் செய்பவர்களாக

    அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

    46:20

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 46 ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்)