சூரா 46 ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்), அயாஹ் 9
-
قُلْ مَا كُنْتُ بِدْعًا مِنَ الرُّسُلِ وَمَا أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلَا بِكُمْ ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰ إِلَيَّ وَمَا أَنَا إِلَّا نَذِيرٌ مُبِينٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلْ
- கூறுவீராக!
- مَا كُنتُ
- நான் இருக்கவில்லை
- بِدْعًا
- புதுமையானவனாக
- مِّنَ ٱلرُّسُلِ
- தூதர்களில்
- وَمَآ أَدْرِى
- அறியமாட்டேன்
- مَا يُفْعَلُ
- என்ன செய்யப்படும்
- بِى
- எனக்கு
- وَلَا بِكُمْ
- இன்னும் உங்களுக்கு
- إِنْ أَتَّبِعُ
- பின்பற்ற மாட்டேன்
- إِلَّا
- தவிர
- مَا يُوحَىٰٓ
- எது/வஹீ அறிவிக்கப்படுகின்றது
- إِلَىَّ
- எனக்கு
- وَمَآ أَنَا۠ إِلَّا
- நான் இல்லை/தவிர
- نَذِيرٌ
- எச்சரிப்பாளராகவே
- مُّبِينٌ
- தெளிவான
“(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.
46:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்