சூரா 49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்), அயாஹ் 14

  1. قَالَتِ الْأَعْرَابُ آمَنَّا ۖ قُلْ لَمْ تُؤْمِنُوا وَلَٰكِنْ قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ ۖ وَإِنْ تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُمْ مِنْ أَعْمَالِكُمْ شَيْئًا ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَالَتِ
    கூறுகின்றனர்
    ٱلْأَعْرَابُ
    கிராமத்து அரபிகள்
    ءَامَنَّا
    நாங்கள் ஈமான் கொண்டோம்
    قُل
    நீர் கூறுவீராக!
    لَّمْ تُؤْمِنُوا۟
    நீங்கள் ஈமான் கொள்ளவில்லை
    وَلَٰكِن
    என்றாலும்
    قُولُوٓا۟
    கூறுங்கள்!
    أَسْلَمْنَا
    நாங்கள் முஸ்லிம்களாக ஆகி இருக்கின்றோம்
    وَلَمَّا يَدْخُلِ
    நுழையவில்லை
    ٱلْإِيمَٰنُ
    ஈமான்
    فِى قُلُوبِكُمْ
    உங்கள் உள்ளங்களில்
    وَإِن تُطِيعُوا۟
    நீங்கள் கீழ்ப்படிந்து நடந்தால்
    ٱللَّهَ
    அல்லாஹ்விற்கு(ம்)
    وَرَسُولَهُۥ
    அவனது தூதருக்கும்
    لَا يَلِتْكُم
    உங்களுக்கு குறைக்க மாட்டான்
    مِّنْ أَعْمَٰلِكُمْ
    உங்கள் செயல்களில்
    شَيْـًٔا
    எதையும்
    إِنَّ ٱللَّهَ
    நிச்சயமாக அல்லாஹ்
    غَفُورٌ
    மகா மன்னிப்பாளன்
    رَّحِيمٌ
    மகா கருணையாளன்

    “நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

    49:14

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்)