சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்), அயாஹ் 5
-
وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ الَّتِي جَعَلَ اللَّهُ لَكُمْ قِيَامًا وَارْزُقُوهُمْ فِيهَا وَاكْسُوهُمْ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَعْرُوفًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَا تُؤْتُوا۟
- கொடுக்காதீர்கள்
- ٱلسُّفَهَآءَ
- புத்திக் குறைவானவர்களுக்கு
- أَمْوَٰلَكُمُ
- செல்வங்களை/உங்கள்
- ٱلَّتِى
- எது
- جَعَلَ
- ஆக்கினான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- لَكُمْ
- உங்களுக்கு
- قِيَٰمًا
- வாழ்வாதாரமாக
- وَٱرْزُقُوهُمْ
- உணவளியுங்கள்
- فِيهَا
- அதில்/அவர்களுக்கு
- وَٱكْسُوهُمْ
- இன்னும் ஆடை அணிவியுங்கள்/அவர்களுக்கு
- وَقُولُوا۟
- கூறுங்கள்
- لَهُمْ
- அவர்களுக்கு
- قَوْلًا
- சொல்லை
- مَّعْرُوفًا
- நல்லது
(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்.
4:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்