சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்), அயாஹ் 66
-
وَلَوْ أَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ أَنِ اقْتُلُوا أَنْفُسَكُمْ أَوِ اخْرُجُوا مِنْ دِيَارِكُمْ مَا فَعَلُوهُ إِلَّا قَلِيلٌ مِنْهُمْ ۖ وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا مَا يُوعَظُونَ بِهِ لَكَانَ خَيْرًا لَهُمْ وَأَشَدَّ تَثْبِيتًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَوْ أَنَّا
- இருந்தால்/நிச்சயமாக நாம்
- كَتَبْنَا
- விதித்தோம்
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- أَنِ ٱقْتُلُوٓا۟
- கொல்லுங்கள்
- أَنفُسَكُمْ
- உங்களை
- أَوِ
- அல்லது
- ٱخْرُجُوا۟
- வெளியேறுங்கள்
- مِن
- இருந்து
- دِيَٰرِكُم
- உங்கள் இல்லங்கள்
- مَّا فَعَلُوهُ
- செய்திருக்க மாட்டார்கள்/அதை
- إِلَّا قَلِيلٌ
- தவிர/குறைவானவர்
- مِّنْهُمْ
- அவர்களில்
- وَلَوْ
- இருந்தால்
- أَنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- فَعَلُوا۟ مَا
- செய்தார்கள்/எதை
- يُوعَظُونَ
- உபதேசிக்கப்படுகிறார்கள்
- بِهِۦ
- அதை
- لَكَانَ
- ஆகி இருக்கும்
- خَيْرًا
- மிக நன்றாக
- لَّهُمْ
- அவர்களுக்கு
- وَأَشَدَّ
- இன்னும் மிக வலுவானது
- تَثْبِيتًا
- உறுதிப்படுத்துவதில்
மேலும், நாம் (அவர்களைப் பார்த்து) “நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று கட்டளைவிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.
4:66
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்