சூரா 50 ஸூரத்து ஃகாஃப், அயாஹ் 5
-
بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- بَلْ
- மாறாக
- كَذَّبُوا۟
- அவர்கள் பொய்ப்பித்தனர்
- بِٱلْحَقِّ
- உண்மையை
- لَمَّا
- அது வந்த போது
- جَآءَهُمْ
- அவர்களிடம்
- فَهُمْ
- அவர்கள் இருக்கின்றனர்
- فِىٓ أَمْرٍ
- ஒரு விஷயத்தில்
- مَّرِيجٍ
- குழப்பமான
இருப்பினும், சத்திய (வேத)த்தை -அது தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.
50:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்