சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 10 – 14

  1. قُتِلَ الْخَرَّاصُونَ

    பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.

    51:10
  2. الَّذِينَ هُمْ فِي غَمْرَةٍ سَاهُونَ

    அவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.

    51:11
  3. يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ

    (நன்மை, தீமைக்குக்) “கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.

    51:12
  4. يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُونَ

    நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).

    51:13
  5. ذُوقُوا فِتْنَتَكُمْ هَٰذَا الَّذِي كُنْتُمْ بِهِ تَسْتَعْجِلُونَ

    “உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்;” எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.

    51:14

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்