சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 32
-
الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَإِذْ أَنْتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ ۖ فَلَا تُزَكُّوا أَنْفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِينَ
- அவர்கள்
- يَجْتَنِبُونَ
- விலகி இருப்பார்கள்
- كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ
- பெரும் பாவங்களை விட்டும்
- وَٱلْفَوَٰحِشَ
- இன்னும் மானக்கேடான செயல்களை விட்டும்
- إِلَّا ٱللَّمَمَ
- தவிர/சிறு தவறுகளை
- إِنَّ
- நிச்சயமாக
- رَبَّكَ
- உமது இறைவன்
- وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ
- விசாலமான மன்னிப்புடையவன்
- هُوَ
- அவன்
- أَعْلَمُ
- மிக அறிந்தவனாக
- بِكُمْ
- உங்களை
- إِذْ أَنشَأَكُم
- உங்களை உருவாக்கிய போதும்
- مِّنَ ٱلْأَرْضِ
- பூமியில் இருந்து
- وَإِذْ أَنتُمْ
- நீங்கள் இருந்த போதும்
- أَجِنَّةٌ
- சிசுக்களாக
- فِى بُطُونِ
- வயிறுகளில்
- أُمَّهَٰتِكُمْ
- உங்கள் தாய்மார்களின்
- فَلَا تُزَكُّوٓا۟
- ஆகவே, பீத்திக் கொள்ளாதீர்கள்
- أَنفُسَكُمْ
- உங்களை நீங்களே
- هُوَ
- அவன்
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- بِمَنِ ٱتَّقَىٰٓ
- அல்லாஹ்வை அஞ்சியவர்களை
(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.
53:32
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்