சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு), அயாஹ் 20

  1. اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ ۖ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا ۖ وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنَ اللَّهِ وَرِضْوَانٌ ۚ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱعْلَمُوٓا۟
    அறிந்து கொள்ளுங்கள்
    أَنَّمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا
    உலக வாழ்க்கை எல்லாம்
    لَعِبٌ
    விளையாட்டு(ம்)
    وَلَهْوٌ
    வேடிக்கையும்
    وَزِينَةٌ
    அலங்காரமும்
    وَتَفَاخُرٌۢ
    பெருமை அடிப்பதும்
    بَيْنَكُمْ
    உங்களுக்கு மத்தியில்
    وَتَكَاثُرٌ
    அதிகத்தின் போட்டியும்தான்
    فِى ٱلْأَمْوَٰلِ
    செல்வங்களிலும்
    وَٱلْأَوْلَٰدِ
    பிள்ளைகளிலும்
    كَمَثَلِ
    போல்தான்
    غَيْثٍ
    ஒரு மழையை
    أَعْجَبَ
    கவர்ந்தது
    ٱلْكُفَّارَ
    விவசாயிகளை
    نَبَاتُهُۥ
    அதன் விளைச்சல்
    ثُمَّ
    பிறகு
    يَهِيجُ
    அது காய்ந்து விடுகிறது
    فَتَرَىٰهُ
    அதை நீர் பார்க்கிறீர்
    مُصْفَرًّا
    மஞ்சளாக
    ثُمَّ
    பிறகு
    يَكُونُ
    அது ஆகிவிடுகிறது
    حُطَٰمًا
    குப்பையாக
    وَفِى ٱلْءَاخِرَةِ
    மறுமையில்
    عَذَابٌ
    வேதனை(யும்)
    شَدِيدٌ
    கடுமையான(து)
    وَمَغْفِرَةٌ
    மன்னிப்பும்
    مِّنَ ٱللَّهِ
    அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
    وَرِضْوَٰنٌ
    திருப்பொருத்தமும்
    وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ
    உலக வாழ்க்கை இல்லை
    إِلَّا مَتَٰعُ
    இன்பமே தவிர
    ٱلْغُرُورِ
    மயக்கக் கூடிய(து)

    அறிந்து கொள்ளுங்கள்| “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது|) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.

    57:20

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு)