சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு), அயாஹ் 27
-
ثُمَّ قَفَّيْنَا عَلَىٰ آثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيسَى ابْنِ مَرْيَمَ وَآتَيْنَاهُ الْإِنْجِيلَ وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا ۖ فَآتَيْنَا الَّذِينَ آمَنُوا مِنْهُمْ أَجْرَهُمْ ۖ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ قَفَّيْنَا
- பிறகு/தொடர்ந்து அனுப்பினோம்
- عَلَىٰٓ ءَاثَٰرِهِم
- அவர்களின் அடிச்சுவடுகளில்
- بِرُسُلِنَا
- நமது தூதர்களை
- وَقَفَّيْنَا
- நாம் பின்னால் அனுப்பினோம்
- بِعِيسَى
- ஈஸாவை
- ٱبْنِ مَرْيَمَ
- மர்யமுடைய மகன்
- وَءَاتَيْنَٰهُ
- அவருக்கு கொடுத்தோம்
- ٱلْإِنجِيلَ
- இன்ஜீலை
- وَجَعَلْنَا
- ஏற்படுத்தினோம்
- فِى قُلُوبِ
- உள்ளங்களில்
- ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ
- எவர்கள்/அவரைப் பின்பற்றினார்கள்
- رَأْفَةً
- இரக்கத்தை(யும்)
- وَرَحْمَةً
- கருணையையும்
- وَرَهْبَانِيَّةً
- இன்னும் துறவரத்தை
- ٱبْتَدَعُوهَا
- புதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர்/அதை
- مَا كَتَبْنَٰهَا
- நாம் அதை கடமையாக்கவில்லை
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- إِلَّا ٱبْتِغَآءَ
- நாடியே தவிர
- رِضْوَٰنِ
- பொருத்தத்தை
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- فَمَا رَعَوْهَا
- ஆனால் அதை அவர்கள் பேணவில்லை
- حَقَّ رِعَايَتِهَا
- அதை பேணவேண்டிய முறையில்
- فَـَٔاتَيْنَا
- கொடுப்போம்
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொள்வார்களோ
- مِنْهُمْ
- அவர்களில் இருந்து
- أَجْرَهُمْ
- அவர்களின் கூலியை
- وَكَثِيرٌ
- இன்னும் அதிகமானவர்கள்
- مِّنْهُمْ
- அவர்களில்
- فَٰسِقُونَ
- பாவிகள்
பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேனவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.
57:27
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்