சூரா 58 ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்), அயாஹ் 8
-
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ نُهُوا عَنِ النَّجْوَىٰ ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُوا عَنْهُ وَيَتَنَاجَوْنَ بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُولِ وَإِذَا جَاءُوكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللَّهُ وَيَقُولُونَ فِي أَنْفُسِهِمْ لَوْلَا يُعَذِّبُنَا اللَّهُ بِمَا نَقُولُ ۚ حَسْبُهُمْ جَهَنَّمُ يَصْلَوْنَهَا ۖ فَبِئْسَ الْمَصِيرُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَلَمْ تَرَ
- நீர் பார்க்கவில்லையா?
- إِلَى ٱلَّذِينَ نُهُوا۟
- தடுக்கப்பட்டவர்களை
- عَنِ ٱلنَّجْوَىٰ
- கூடிப் பேசுவதை விட்டும்
- ثُمَّ
- பிறகு
- يَعُودُونَ
- திரும்புகிறார்கள்
- لِمَا نُهُوا۟
- எதிலிருந்து தடுக்கப்பட்டார்களோ
- عَنْهُ
- அதிலிருந்து
- وَيَتَنَٰجَوْنَ
- கூடிப் பேசுகிறார்கள்
- بِٱلْإِثْمِ
- பாவத்தையும்
- وَٱلْعُدْوَٰنِ
- வரம்புமீறுவதையும்
- وَمَعْصِيَتِ
- மாறுசெய்வதையும்
- ٱلرَّسُولِ وَإِذَا جَآءُوكَ
- தூதருக்கு/அவர்கள் உம்மிடம் வந்தால்
- حَيَّوْكَ
- உமக்கு முகமன் கூறுகிறார்கள்
- بِمَا لَمْ يُحَيِّكَ
- உமக்கு எதை முகமன் கூறவில்லையோ
- بِهِ
- அதை
- ٱللَّهُ
- அல்லாஹ்
- وَيَقُولُونَ
- கூறுகிறார்கள்
- فِىٓ أَنفُسِهِمْ
- தங்கள் மனதிற்குள்
- لَوْلَا يُعَذِّبُنَا
- நம்மை வேதனை செய்யாமல் இருக்க வேண்டுமே
- ٱللَّهُ بِمَا نَقُولُ
- அல்லாஹ்/நாம் சொல்வதைக் கொண்டு
- حَسْبُهُمْ
- அவர்களுக்கு போதும்
- جَهَنَّمُ
- நரகமே
- يَصْلَوْنَهَا
- அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்
- فَبِئْسَ ٱلْمَصِيرُ
- அது மீளுமிடங்களில் மிகக் கெட்டதாகும்
இரகசியம் பேசுவதை விட்டுத்தடுக்கப்பட்டிருந்தும், எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன் பால் மீண்டு பாவத்தையும் வரம்பு மீறுதலையும், ரஸூலுக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியமாக ஆலோசனை செய்கிறார்களே அவர்களை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? பின்னர் அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உம்மை எ(வ்வாசகத்)தைக் கொண்டு ஸலாம் (முகமன்) கூறவில்லையோ அதைக் கொண்டு (முகமன்) கூறுகிறார்கள். பிறகு, அவர்கள் தங்களுக்குள் “நாம் (இவ்வாறு) சொல்லியதற்காக ஏன் அல்லாஹ் நம்மை வேதனைக்குள்ளாக்கவில்லை” என்றும் கூறிக் கொள்கின்றனர். நரகமே அவர்களுக்கு போதுமானதாகும்; அவர்கள் அதில் நுழைவார்கள் - மீளும் தலத்தில் அது மிகக் கெட்டதாகும்.
58:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்