சூரா 58 ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்), அயாஹ் 9
-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَنَاجَيْتُمْ فَلَا تَتَنَاجَوْا بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُولِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்களே!
- إِذَا تَنَٰجَيْتُمْ
- நீங்கள் கூடிப்பேசினால்
- فَلَا تَتَنَٰجَوْا۟
- கூடிப்பேசாதீர்கள்
- بِٱلْإِثْمِ
- பாவமானதையும்
- وَٱلْعُدْوَٰنِ
- வரம்புமீறும் காரியத்தையும்
- وَمَعْصِيَتِ
- மாறுசெய்வதையும்
- ٱلرَّسُولِ
- தூதருக்கு
- وَتَنَٰجَوْا۟
- கூடிப்பேசுங்கள்!
- بِٱلْبِرِّ
- நன்மையான விஷயத்தையும்
- وَٱلتَّقْوَىٰ
- இறையச்சம் மிகுந்த விஷயத்தையும்
- وَٱتَّقُوا۟
- அஞ்சிக் கொள்ளுங்கள்!
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- ٱلَّذِىٓ إِلَيْهِ
- எவன்/அவனிடம்தான்
- تُحْشَرُونَ
- நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள்; ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு - எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ - அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
58:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்