சூரா 59 ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்), அயாஹ் 10
-
وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- جَآءُو
- வந்தார்கள்
- مِنۢ بَعْدِهِمْ
- இவர்களுக்கு பின்னர்
- يَقُولُونَ
- கூறுவார்கள்
- رَبَّنَا
- எங்கள் இறைவா
- ٱغْفِرْ لَنَا
- எங்களை(யும்) மன்னிப்பாயாக
- وَلِإِخْوَٰنِنَا
- எங்கள் சகோதரர்களையும்
- ٱلَّذِينَ
- எவர்கள்
- سَبَقُونَا
- எங்களை முந்தினார்கள்
- بِٱلْإِيمَٰنِ
- ஈமானில்
- وَلَا تَجْعَلْ
- ஆக்கிவிடாதே
- فِى قُلُوبِنَا
- எங்கள் உள்ளங்களில்
- غِلًّا
- குரோதத்தை
- لِّلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்கள் மீது
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- إِنَّكَ
- நிச்சயமாக நீதான்
- رَءُوفٌ
- மகா இரக்கமுள்ளவன்
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
59:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்